கடந்த இரண்டுமாதங்களிற்கு முன்னர் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம் . அதாவது இலங்கை கிறிக்கெட் அடிப்படையிலேயே பழுது பட்டுவிட்டது என்றும் இது இலங்கையின் பொருளாதாரம் போல் வங்குறோத்து ஆகிவிட்டது என்றும்.
இப்போது இலங்கையின் கிறிக்கெட் சபை மற்றும் இலங்கையின் கிறிக்கொட் வீரர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேம்.
1– இலங்கை கிறிக்கெட்டில் பல மில்லியன் ரூபா திருடப்பட்டுவிட்டது.
2– திருடர்கள் நாட்டை விட்டு தப்பி ஓட்டுகின்றனர்.
3– மத்திய வங்கி திருடனைபோல , சீனி வரி திருடனை போல , வெள்ளை பூடு திருடனை போல , மரக்கறி எண்ணை திருடனை போல கிறிக்கெட் திருடனும் இலங்கையில் அல்லது சர்வதேசத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியப்போகின்றான்.
4– இலங்கை கிறிக்கெட் சபையை போல இலங்கை அணிக்குள்ளும் பல திருட்டு நடந்துள்ளது. குறிப்பாக துடுப்பாட்ட காரர்கள் ஒரு குழுவாக திருடப்பட்டுள்ளனர்.
5– இலங்கை கிறிக்கெட் அணியின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி சர்வதேச கிறிக்கட் கவுன்சிலிடமே ( ICC ) உள்ளது. ICC #இலங்கை #அணியை தடை செய்யும். சிப்பாபே அணியை தடை செய்தது போல.
6– இலங்கை கிரிக்கெட்டில் உள்ள அரசியல் தலையீட்டை அகற்ற கோரி ICC கடிதமும் அனுப்பி உள்ளது.
7– இலங்கை கிறிக்கெட்டுடன் இனைந்து ICC மேற்கொண்ட பணிகளில் ஊழல் , திருட்டு நடந்தது நிரூபனம் ஆனால் இலங்கை அணிக்கு இறுதி ஆணி அடிக்கப்படும் ICC ஆல்.
8– இலங்கை கிறிக்கெட் நிலநடுக்கம் இலங்கை அரசியலில் நிச்சயமாக பூகம்பமாக வெடிக்கும். பின்னர் மக்கள் வெள்ளம் சுனாமிபோல் பாயும். உலகத்தின் முன் யாரும் இந்த விடயத்தில் இலங்கைக்கு உதவமாட்டார்கள்.
9– அரகலயவை விட பலமான போராட்டம் இலங்கைத்தீவில் வெடிக்கும்.
குறிப்பு -1 :– இலங்கைதீவை திருடியவர்கள் மீது மக்கள் தீர்ப்பு நிகழும் நாள் தொலைவில் இல்லை. எளிதில் அச்சப்படும் மனநிலை கொண்ட சிங்கள மக்கள் பலரை அம்மணமாக்கி வீதியில் இழுக்கப்போகின்றனர். இலங்கை அணி நாடு திரும்பும் போது மிகுந்த சவாலை சந்திக்கும்.
குறிப்பு – 2 :– கடந்த வருட அரகலய பிறந்தது ஜனாதிபதி மாளிகை என்றால் அடுத்த அரகலயவின் பிறப்பிடம் இலங்கை கிறிக்கெட் சபை.
