நாலாவது ஆண்டில் கால்பதித்து தலைசிறந்து தனக்கான பெருமையுடன் உறவுகளை இணைத்து தலைநிமிர்ந்து நிற்கும் வாகைத்தமிழ் வானொலியின் 2024 ற்கான வாகைக்குயில் தேச விடுதலைப் பாடற் போட்டி நிகழ்ச்சியானது
கடந்த 14ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முதல் நிகழ்விலேயே ஐரோப்பிய நாடுகளான சுவிஸ்,பிரித்தானியா,யேர்மனி,பிரான்ஸ்,பெல்ஜியம்,டென்மார்க் என ஆறு நாடுகளில் இருந்து 55க்கும் அதிகமான போட்டியாளர்களோடு 250க்கும் அதிகமான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
பொதுச்சுடரேற்றலை திருமதிகளான வாணி சர்மா,விஜிதாம்பாள்,தனுகா,நந்தினி, கலா,கமலாம்பாள் ஜஸ்மின் ஆகியோர் ஏற்றியதைத் தொடர்ந்து
ஈகைச்சுடரினை கப்டன் சூரியத்தேவனின் சகோதிரி திருமதி பார்த்தீபன் சர்வீனா அவர்கள்
ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அகவணக்கமும் வாகைப்பண்ணும் இடம்பெற்ற வேளை
பொதுமக்கள்
எழுந்து நின்று அகம்வணங்கி வரவேற்பு வழங்கியிருந்தனர்
அடுத்து வரவேற்பு நடனத்தினை நாட்டியத்தாரகை நாட்டியத்தென்றல் விருது பெற்ற வாணிசர்மா அவர்களின் மாணவி
நவீனா முத்துத்தம்பி
அவர்கள் வழங்கியிருந்தார்
வரவேற்புரையை தனுகா கலைச்செல்வன் வழங்கி இருந்தார்
சிறப்புப் பாடலை எழுச்சிக்குயில் மற்றும் இசைக்குயில் விருதாளர் ரம்யா சிவானந்தராஜா வழங்கியிருந்தார்.
வாகைக்குயில் தெரிவுக்குழாமாக
தாயகத்தின் மூத்த இசையாளர் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களின் அன்புப் புதல்வர் சாய்தர்சன்
மற்றும் ஈழத்தின் மூத்தபாடகர் வாகைத்தமிழ் வானொலியின் போர்முழக்கம் விருதாளர் சுகுமார் அவர்களின் அன்புமகன் முகிலரசன் மற்றும்
சுவிஸ்லாந்தின் எழுச்சிக்குயில் இசைக்குயில் விருது பெற்ற ரம்யா சிவானந்தராஜா அவர்களும் நடுவர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
வாகைக்குயில் போட்டிப்பிரிவுகளாக
மழலையர்,கப்டன் குட்டிக்கண்ணன்,லெப்டினன்ட் மாங்கனி(அ,ஆ) ,மேயர் மாதவன்(அ,ஆ),கப்டன் வீரத்தேவன்,மேயர் சிட்டு,
இணை பிரிவு எனும் பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு ஏழுபோட்டியாளர்கள் தெரிவாகி போட்டியிட்டனர். அதில் வாகைக்குயில்2024 எனும் விருதை செல்வி அனுஷ்கா கங்காதரன் அவர்கள் தட்டிச்சென்றிருந்தார்.
வாகைத்தமிழ் வானொலியின் ஓராண்டுச் சஞ்சிகையை தமிழீழதேசத்தின் மூத்த இலக்கியவாதியும் பாடலாசிரியருமான திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் அறிமுகம் செய்ய சிறப்புப் பிரதிகளை ஐரோப்பிய நாடுகள் தழுவிய கலைஞர்கள் பெற்றிருந்தார்கள்.
இந்நிகழ்வை பிரான்ஸ் நாட்டின் சிறந்த அறிவிப்பாளர் திரு குரு அவர்கள் தொகுத்து வழங்க சுவிஸர்லாந்தின் சிறந்த ஒலி,ஒளி சேவைகளை வழங்கும் திரு வரன் அவர்கள் திறம்பட வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.நிறைவாக இந் நிகழ்வு சிறக்க உழைத்த அனுசரணையாளர்கள் மற்றும் கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் நன்றி கூரலோடு நிகழ்வு நிறைவானது.
வாகைச் செய்திகளுக்காக
தாயகத்தில் இருந்து ரிஜா.


